தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல்  அக்டோபரில்தான் தகனம்!

World
Typography

 பேங்காக், ஏப்ரல்.20- தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இறந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அடக்கம் செய்யப்படாமல் இருக்கும் அவருடைய உடல் எதிர்வரும் அக்டோபர் மாதம் இங்குள்ள பொதுச் சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் மன்னராக 88 ஆண்டுகள் வாழ்ந்து கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அவர் காலமானார். அவர் தமது 18ஆவது வயதில் மன்னராக முடிசூட்டப்பட்டார். தாய்லாந்து அரச வாரிசுகளில் இவர் ஒன்பதாவது இராமராக கருதப்பட்டார். 

தாய்லாந்து மக்கள் மத்தியில் மன்னருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உண்டு. மன்னரை அவர்கள் கடவுளுக்குச் சமமாகப் போற்றும் பழக்கம் கொண்டவர்கள். பூமிபால் அதுல்யதேஜ் மரணமடைந்த பின்னர் ஓராண்டு காலத்திற்குத் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.

வரும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி பேங்காக் பொதுச் சதுக்கத்தில் மன்னரின் உடலைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு நடப்பு மன்னரும் பூமிபாலின் புதல்வருமான மகா வஜிரலோங்கோர்ன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS