Latestவிளையாட்டு

அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்வதே எனது இலக்கு – கிஷோனா உறுதி

கோலாலம்பூர், ஜூன் 11 – இவ்வாண்டு நடைபெறவிருக்கும் பேட்மிண்டன் போட்டிகளில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதே தமது இலக்கு என்கிறார் மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான கிஷோனா. கடந்த டிசம்பர் மாதம் மணிலாவில் நடைபெற்ற சீ போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிஷோனா இந்த 2020 ஆம் ஆண்டில் சாதனை படைப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இவ்வாண்டின் முதல் 3 மாதத்தில் கோவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்பு அனைத்துலக ரீதியில் சாதனை படைக்க வேண்டும் என்ற தமது திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொன்னார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் உலகின் 19ஆம் நிலை விளையாட்டாளரான ஜப்பானின் அயா ஓஹோரியை வென்றதன் மூலம் புதிய நம்பிக்கையையும் கிஷோனா ஏற்படுத்தினார். அதோடு இந்த வெற்றியினால் உலகின் முதல் 20 முன்னணி மகளிர் பேட்மிண்டன் வீராங்கனை என்ற முத்திரையையும் அவர் பதித்தார்.
மீண்டும் பயிற்சி தொடங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிஷோனா அடுத்து வரும் பேட்மிண்டன் போட்டிகளுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜூன் 1ஆம்தேதி முதல் மலேசிய ஆட்டக்காரர்களுடன் கிஷோனா மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார். மீண்டும் பயிற்சி தொடங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிஷோனா அடுத்து வரும் பேட்மிண்டன் போட்டிகளுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு மலேசிய தகுதி பெறுவதற்கு தேர்வு சுற்று ஆட்டத்தில் கிஷோனா முக்கிய பங்கை ஆற்றி இருப்பதை மறுக்க முடியாது. இம்முறை உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் மலேசியா நம்பிக்கையோடு களம் இறங்குவதற்கும் கிஷோனாவின் பங்கேற்பு அமைந்துள்ளது.
இந்த வேளையில் மலேசியா பேட்மிண்டன் குழுவின் பயிற்சி குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியாவின் இந்திரா விஜயாவின் கீழ் மேலும் சில நுணுக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என கிஷோனா நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!