Latestமலேசியா

அதிகபட்ச மது அளவுக்கு கட்டாய சிறை; மரணம் விளைவித்தால் இரட்டை சிறை தண்டனை

கோலாலம்பூர், ஜூலை 15 – மது அருந்தி மரணத்தை விளைவிக்கும் நபர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனையும், அனுமதிக்கப்பட்ட மது அளவைவிட கூடுதலாக மது அருந்தி வாகனத்தை ஓட்டுபவருக்கு கட்டாய சிறை தண்டணை வழங்கப்படுவதும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் அம்சங்களில் அடங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் வீ கா சியோங் விளக்கப் படுத்தினார்,

இதனைத் தவிர்த்து, மது அருந்தி வாகனத்தை செலுத்தும்போது ஒருவருக்கு காயம் ஏற்படுத்துவது மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் இரண்டு வெவ்வேறு குற்றங்களூக்கு தனித்தனியாக தண்டனை விதிக்கும் வகையில் செக்ஷன் 44ல் மாற்றம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். மரணத்தை விளைவிப்பது கடுமையான குற்றமாக கருதப்படும்.
இந்த விதியின் கீழ் கூடியபட்ச சிறை தன்டனை 10ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளாக அதிகரிப்பட்டுள்ளது.

தற்போது செக்ஷன் 44ன் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் வாகன லைசன்ஸ் முதல் குற்றத்திற்கு 5 ஆண்டுகளுக்கு தகுதி இழப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு 10 ஆண்டுக்கும் தகுதி இழக்கச்செய்யப்படும். இனி அது 20 ஆண்டுகளக அதிகரிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கு ஏற்ப மதுபானம் அருந்தியவரின் மது அளவும் குறைக்கப்பட்டுள்ளது.  சுவாசிக்கும்போதும், ரத்தத்தில் கலந்த மற்றும் சிறுநீரில் கலந்த மதுவின் அளவும் இந்த அம்சத்தில் கவனத்தில் எடுத்துக் கொல்ளப்படும்.

100 மில்லிலிட்டர் சுவாசத்தில் 22 மைக்ரோகிராம் மதுபான அளவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 50 மைக்ரோ கிராம் மதுபான அளவு அனுமதிக்கப்படுகிறது.
100 மில்லிலிட்டர் சிறுநீரில் 67 மைக்ரோகிராம் மதுமான அளவு அனுமதிக்கப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!