Latestமலேசியா

அனுமதியின்றி காட்டில் புகுந்து நடந்த 14பேர் கைது

ஈப்போ, ஜூன் 22 – கம்பாரில் பாதுகாக்கப்பட்ட பூஜாங் மலாக்கா வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக ஆறு பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். 23 முதல் 65 வயதுடைய அந்த தனிப்பட்ட நபர்களை Kinta Manjung காட்டுவள அலுவலகத்தின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
கம்பார் Sahom valley resort-ட்டிற்கு சொந்தமான நிலப் பகுதி வழியாக அக்காட்டில் புகுந்த அவர்கள் பூஜாங் மலாக்கா மலைப்பகுதியை நெருங்கியபோது கைது செய்யட்டனர். சம்பந்தப்பட்ட அந்த 14பேருக்கு எதிராக கம்பார் கோலா டீபாங் ( Kuala Dipang ) போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் போலீஸ ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

1984ஆம் ஆண்டின் தேசிய வனத்துறை சட்டத்தின் 47 ஆவது விதியின் கீழ் அனுமதியின்றி காட்டில் நுழைந்ததற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது 3ஆண்டுகள் வரை சிறை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம். மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நுழைவதற்கு மாவட்ட காட்டுவள அலுவலகத்தின் அனுமதி தேவையாகும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!