Latestஉலகம்

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்

பைகோனுர், ஏப் 10- உலகில் கோவிட் -19 வைரஸ் விவகாரம் பெரிய மிரட்டலை ஏற்படுத்தி வந்தபோதிலும் இந்த பூமியின் மிகவும் பாதுகாப்பான இடமான விண்வெளிக்கு செல்கிறோம் எனக் கூறிய மூன்று விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் கஜகஸ்தானிலிருந்து அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. ஏற்கனவே அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருக்கும் இதர மூன்று விண்வெளி பாதுகாப்பான வீரர்களுடன் அம்மூவரும் சேர்ந்து கொள்வார்கள்.

நாசா விண்வெளி வீர்ர் கிறிஸ் காசெட்லி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அனதோலி ஈவனிஷின், ஈவன் வெக்னா ஆகியோர் இந்த விண்வெளி பயணத்தில் இடம்பெற்றனர்.  இதில் பயணம் செய்த இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்கரும் கோவிட் -19 வைரஸ் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பூமியிலிருந்து விண்வெளிக்கு கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் அந்த மூன்று விண்வெளி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்டுத்தப்பட்டிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!