Latestமலேசியா

அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான முறையில் பொருளாதாரம் புத்துயிரூட்டப்படும்

ஷா ஆலாம், ஜூன் 30 – அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான வகையில் பொருளாதார புத்துயிரூட்டும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் என கூட்டரசு அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கோவிட் 19 தொற்றின் தாக்கத்திலிருந்து அனைத்து மாநிலங்களும் மீட்சி பெறுவதற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமான வாய்ப்புகள் வழங்கப்படும் என அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கோவிட் 19 தொற்று நெருக்கடி காலக்கட்டத்தில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிப்பதற்கு அரசியல் கருத்துவேறுபாடுகளை எல்லாம் மறந்து கூட்டரசு மற்றும் மாநில அராங்கங்கள் செயல்பட வேண்டும் என அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கூட்டரசு அரசாங்கங்களும் ஒன்றினைந்து செயல்படுவதற்கு நேரம் வந்துவிட்டதாக அவர் சொன்னார். சிலாங்கூருக்கான கூட்டரசு நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருடின் ஷாரியும் கலந்துகொண்டார். இதற்கு முன் அனுமதிக்கப்பட்ட பல்வேறு அடிப்படை வசதித் திட்டங்களை விரைவாக அமல்படுத்துவதற்கு இந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அஸ்மின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!