Latestஉலகம்

அமெரிக்காவில் ஒரு நாளில் கிட்டத்தட்ட 2,000 பேர் மரணம்

வாஷிங்டன், ஏப் 8 – கோவிட் -19 வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2,000பேர்வரை உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் உட்பட அமெரிக்காவில் அடுத்தடுத்து நேற்று இரவு மணி 8 மணிவரை 1,939 பேர் மரணம் அடைந்தனர். அந்நாட்டில் இந்த உயிர்க்கொல்லி தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,857ஆக அஅதிகரித்தது.

அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 540ஆக அதிகரித்துள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியுயார்க்கில் மட்டும் 731 பேர் மாண்டனர்.

இந்நிலையில் இப்போதைய கோவிட்-19 நெருக்கடி மோசமானதற்கு உலக சுகாதா நிறுவனமே காரணம் என அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா பெரிய அளவில் நிதியுதவி வழங்கி வருகிறது. அப்படியிருக்கும்போது கோவிட்-19 வைரஸ் பரவியபோது சீனாவை மட்டுமே மையப்படுத்தி உலக சுகாதார நிறுவனத்தின் செயல்படுகள் இருந்ததாக டோ னல் டிரம்ப் குற்றஞ்சாட்டினார் .

அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று இப்போது ஏற்படுத்திவரும் பெரிய அளவிலான உயிரிழப்பு குறித்து அந்நாட்டு மக்களின் கடுமையான குறைகூறலுக்கு டோனல்ட் டிரம்ப் உள்ளாயுள்ளார். இந்த தொற்று வழக்கமான சளி என்றும் இது அமெரிக்காவில் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி டிரம்ப் மெத்தனமாக இருந்ததே இப்போதைய நெருக்கடிக்கு காரணம் என அமெரிக்க மக்களிடையே கடுமையான குறைகூறலுக்கு டிரம்ப் உள்ளாகியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!