Latestஉலகம்

அமெரிக்காவில் தொடரும் மரணங்களால் எங்கும் சோகம்

நியூயார்க், ஏப் 10 – அமெரிக்கர்கள்  எதிர்ப்பார்க்காத அளவில் அந்நாட்டில் கோவிட் -19 வைரஸ் பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா முழுமையிலும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை , 16,697 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர அமெரிக்கா முழுவதிலும் 468,895 பேருக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக நியூயார்க் திகழ்கிறது. பெரிய அளவில் புதை குழிகள் தோண்டப்பட்டு 40 அல்லது 50 சவப் பெட்டிகள் வைக்கப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
சடலங்கள் அடக்கம் செய்யப்படும் காட்சிகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் 24 மணி நேரமும் தகனம் நடைபெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிச் சடங்குகளில் கல்லறைப் பணியாளர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவதற்கு அனுமதி வழங்கபடுவதில்லை. கோவிட் -19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடலிருந்து கிருமி பரவும் அபாயத்தின் காரணத்தினால் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்கூட அருகே கூடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களின் இறுதி சடங்குளை காணொளியில்தான் பார்க்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை சவக்கிடங்கில் வைப்பதற்கு போதுமான இடமில்லை என்பதால் முற்றிலும் குளிர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட டிரக்குகளில் உடல்கள் வைக்கப்படுகின்றன.

இதனிடையே, ஜெர்மனியில் 118,235பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இதுவரை 2,607பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,210ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 117,749 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  ஈரானில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,110ஆக அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!