Latestஇந்தியாஉலகம்

அமெரிக்காவுக்கு மலேரியா காய்ச்சல் மருந்தை ஏற்றுமதி செய்த இந்தியா – நன்றி தெரிவித்தார் ட்ரம்ப்

அமெரிக்கா, ஏப் 9 – மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தை அமெரிக்காவில் கோவிட்-19 நோய்க்கு எதிராக பயன்படுத்த இந்தியா அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய இணக்கம் தெரிவித்ததற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு Hydroxychloroquine எனும் அந்த மருந்தை வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுவதை இந்தியா ரத்து செய்வதாக மோடி அறிவித்திருந்தார். இந்தியா தான் உலகிலேயே மிக அதிக அளவில் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறது. உலகளவில் அதன் உற்பத்தி 70% ஆகும்.

அம்மருந்து கோவிட்-19 நோயாளிகளுக்கு நிவாரணம் கொடுப்பதாக கண்டறியப்பட்டவுடன் அதற்கான தேவை கிடு கிடுவென உயர்ந்தது. இந்தியா உள்நாட்டில் அம்மருந்து பற்றாமல் போய்விடும் எனும் அச்சத்தில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் பின் விளைவுகள் சந்திக்க நேரிடும் என Trumph எச்சரித்தார். அதன் பிறகு மனிதாபிமான அடிப்படையில் அம்மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக மோடி நேற்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அசாதாரண காலக்கட்டத்தில் இந்தியா அம்மருந்தை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தற்கு அந்நாட்டுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டோம். இந்நோய்க்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவலான தலைமைத்துவ ஆளுமைக்கு நன்றி என்றும் டோனல்ட் ட்ரம்ப் தமது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதுவரையில் அமெரிக்காவில் ஏறக்குறைய 15,000 பேர் கோவிட்-19க்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!