Latestமலேசியா

அம்னோவின் உயர் பதவிக்கு 6 பேர் போட்டி; கடும் போட்டா போட்டி ஏற்படலாம்

கோலாலம்பூர், மே 22- கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அம்னோ மீண்டும் வந்ததைத் தொடர்ந்து கட்சியின் உயர் பதவிகளை கைப்பற்றுவதற்கான கடும் போட்டா போட்டி ஏற்படும் என தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அம்னோவின் அடுத்த தலைவராக வருபவர் பிரதமர் பதவிக்கு வரும் சாத்தியம் இருப்பதால் இப்போதே அதற்கான வியூகத்தை அமைக்கும் படலாம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

நடப்பு தலைவர் அகமட் ஹாஸிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் உட்பட அறுவர் அம்னோவின் உயர் பதவியை கைப்பற்றும்  நோக்கத்தை கொண்டுள்ளனர். மேலும் நடப்பு துணைத்தலைவர் முகமட் ஹசான், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் மற்றும் ஹிசாமுடின்  உசேய்ன்  ஆகியோரும்  கட்சியின் உயர்மட்ட பதவிக்கு வியூகம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தில் முதன்மை அமைச்சராக  இருந்து தினசரி  கோவிட்-19 தொடர்பான செய்திகளை வழங்கிவரும்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் அம்னோ உயர்மட்ட பதவிக்கான தேர்தலில் களம் இறங்குவார் என  அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதால் அவரை  சாதாரணமாக கருதிவிட முடியாது. கடந்த அம்னோ பொதுத் தேர்தலில் மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டபோது கூடுதல் வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இஸ்மாயில் சப்ரி வெற்றி பெற்றார். முகமட் ஹசான் கூட்டரசு அரசில் அமைச்சராக இல்லாவிட்டாலும் நெகிரி அரசு கவிழ்ந்தால் அடுத்த மந்திரிபுசார் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் அவர் தலைவர் பதவிக்கு குறி வைக்கலாம்.   எனவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தல்  பெரும் பரப்பரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!