Latest

அருகே மருத்துவமனை இல்லாவிட்டால் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கலாம்

கோலாலம்பூர், ஏப் 3 – நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் 10 கிலோமீட்டருக்கு உட்பட்டே பொருட்களை வாங்குவதற்கு பயணம் செய்ய முடியும் என்ற விதிமுறை இருந்தாலும் தங்களது வசிப்பிடப் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இல்லாவிட்டால் பொதுமக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

மேலும் பொருட்களை வாங்கக்கூடிய கடைகள், மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக கடைகள் எதுவும் இல்லாவிட்டால் பொதுமக்கள் 10 கிலோமீட்டர் துரத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு செல்ல முடியும் என அவர் விளக்கம் அளித்தார்.

உடல் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக கிளினிக் அல்லது மருத்துவமனை செல்ல விரும்புவோருக்கு போலீசார் சிறப்பு உரிமையை பயன்படுத்தி விலக்களிக்க முடியும் என இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அதே போன்று தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் மனிகைக் கடைகள் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் தூரத்திலுள்ள கடைகளுக்கு செல்ல முடியும் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!