Latestமலேசியா

அலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது

அலோஸ்டார். ஜூலை 9 – அலோஸ்டாரில் 100 ஆண்டு காலம் வரலாற்று பெருமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என அதன் பராமரிப்பாளர் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும் அந்த ஆலயம் இன்று உடைக்கப்பட்டது. நேற்று நள்ளிவுக்குப் பிறகு அலோஸ்டாரைச் சேர்ந்த சுமார் 200 நகரான்மைக் கழக அதிகாரிகள் அந்த ஆலயத்தை தகர்தெறிந்தனர்.

மரத்தடியில் வீற்றிருந்த ஸ்ரீ மதுரை வீர்ர் ஆலயம் விடியற்காலை மணி 2 மணிக்குள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஆலயம் இருந்த இடத்திலிருந்து போலீஸ்காரர்களால் தாம் வெளியேற்றப்பட்டதாக ஆலய பராமரிப்பாளரான சி. விஜய் மோகன் தெரிவித்தார். இந்த ஆலயம் சட்டவிரோத சாலை ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால் போக்குவரத்திற்கு தொந்தரவாக இருப்பதாக கூறி அந்த ஆலயத்தை அப்புறப்படுத்தும்படி சில வாரங்களுக்கு முன் அலோஸ்டார் நகரான்மைக் கழகம் கடிதம் வழங்கியிருந்த்து.

இதனிடையே இந்த ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக விஜய் மோகன் கூறினார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடாரத்திற்கு வந்த முன்னோர்கள் ரயில்வே தண்டாவாள நிர்மாணிப்பு தொழிலாளர்களாக இருந்தபோது இந்த ஆலயம் கட்டப்பட்டதாக அவர் சொன்னார். 1900ஆம் ஆண்டுகளில் இந்த ஆலயம் கட்டுவதற்கான நிலத்தை மலேயன் ரயில்வே வழங்கியதாகவும் இந்த ஆலயத்தை பதிவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த இடம் சிறிதாக இருப்பதை காரணம் காட்டி அதனை சங்கங்களின் பதிவகம் நிராகரித்துவிட்டதையும் விஜய் மோகன் தெரிவித்தார்.

இதனிடையே அலுவலக நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இந்த ஆலயத்தை அதிகாலை வேளையில் உடைக்க வேண்டிய அவசியம் என்ன என்று பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி வினவினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!