Latestமலேசியா

அல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது

கோலாலம்பூர், ஜூலை 10- நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை குறித்து அல் ஜஷிரா ஒளிபரப்பிய ஆவண படம் தொடர்பில் அந்த தொலைக்காட்சி நிலையத்தின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்தது.

இன்று காலை மணி 8.50 அளவில் அவர்கள் புக்கிட் அமான் வந்தனர். அவர்களது வழக்கறிஞர் ஹிசாம் தே போக் தெ தலைமையிலான ஏழு வழக்கறிஞர்களும் அவர்களுடன் வந்தனர். அல் ஜஷிரவின் நிருபர் டிரு அம்புரோஸ்சும் ( Drew Ambrose) விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

25 நிமிடங்களுக்கு ஒளிபரப்பட்ட அந்த ஆவணப்படத்தில் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர்.  இதனிடையே சர்ச்சைக்குரிய இந்த ஆவணப் படத்தை தங்களது தரப்பு தொடர்ந்து தற்காக்கும் என அல் ஜஷிராவின் நிர்வாகம் நேற்றிரவு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!