Latestமலேசியா

அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் பெர்சத்துவில் இணையும் விண்ணப்பத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

கோலாலம்பூர், மே 23 – பி.கே.ஆர் கட்சியிலிந்து தாவிய அதன் முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெர்சத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருந்தாலும் அவர்கள் இன்னும் பெர்சத்து கட்சியில் இணைவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் எனக்கூறிக்கொள்ளும் தலைமை செயலாளர் டத்தோ மர்சுகி யஹ்யா இதனை தெரிவித்தார்.
அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் பெர்சத்துவில் சேர்ந்துவிட்டதாக கட்சியின் தலைவர் மொஹிடின் யாசின் கூறியிருந்தாலும் இன்றுவரை அஸ்மின் எந்தவொரு அதிகாரப்பூர்வ பாரத்தையும் சமர்ப்பிக்கவில்லையெ என மர்சுகி தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் நான் அஸ்மினிடம் உங்களது உறுப்பினர் பாரம் எங்கே என்று கேட்டுவிட்டேன்.
கட்சியின் தலைவர் கூறியதுபோல் பெர்சத்துவில் அஸ்மின் இணைந்திருந்தால் எந்த டிவிசனில் உள்ள கிளையில் இணைந்துள்ளார், மற்றும் உறுப்பினர் எண்களை அவர் தந்திருக்க வேண்டும் என நேற்றிரவு பெர்சத்து இளைஞர் பிரிவு தனது முகநூலில் ஒளிபரப்பிய பேட்டியில் மர்சுகி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!