Latestமலேசியா

ஆசிரியர் கீழே விழுந்து மரணம்; சுகாதார அமைச்சு,கல்வி அமைச்சு இரங்கல்

தானா மெரா, ஜூலை 15 – கிளாந்தான், பத்து காஜா தேசிய நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது முதல்மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த ஆசிரியரின் இறுதிச் சடங்கில் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்சி ஜிடின் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம், சுகாதார அமைச்சு தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது.

நேற்று பள்ளியின் குழாய் மற்றும் கை கழுவும் சிங்கியை சரிபார்த்து விட்டு திரும்பும் போது இவ்விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 54 வயதுடைய அந்த ஆசிரியர் பத்து காஜா தேசிய நிலைப்பள்ளியில் கணிதப்பாட ஆசிரியாக 17 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!