Latestமலேசியா

ஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று

கோலாலம்பூர் மே 25 மலேசியாவில் ஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தீபகற்ப மலேசியாவில் புக்கிட் ஜாலில், கே . எல் .ஐ.ஏ மற்றும் செமினி குடி நுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குடியேறிகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ  கைருல் ஸைமி இத்தகவலை வெளியிட்டார்.

அவர்களில் 110 பேர்  செர்டாங்கில் உள்ள மேப்ஸ் விவசாய கண்காட்சி பூங்கா சிகிச்சை மையத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். எஞ்சிய குடியேறிகள்  புக்கிட் ஜாலில், கே எல் ஐ. ஏ மற்றும் செமினி குடிநுழைவு தடுப்பு முகாம்களில் இருந்து வருகின்றனர்.

இன்று அமைச்சர் இஸ்மாயில் சப்ரியுடன்   அந்த மையத்திற்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது கைருல் இத்தகவலை வெளியிட்டார்.

அவர்களுடன் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோரும் இந்த மையத்தை பார்வையிட்டார்
.அதோடு 3 தடுப்பு முகாம்களிலும் நிறுத்தப்பட்டிருந்த 238 குடிநுழைவு துறை அதிகாரிகள் 14 நாட்களுக்கு தனித்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் இதர அதிகாரிகள் இந்த தடுப்பு முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சரவா உட்பட நாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் ஆவணமற்ற 14,496 வெளிநாட்டு குடியேறிகள் இருந்து வருகின்றனர் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!