Latestமலேசியா

இணைய மோசடியில் 8 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்

குவாந்தான், மே 23 – போலிஸ் இன்ஸ்பெக்டர் போல தொலைப்பேசியில் பேசிய நபரிடம் குவாந்தானைச் சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் 859,500 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

ஏப்ரல் 24ஆம் திகதி அப்பெண்ணை தொடர்புக் கொண்ட ஆடவன் ஒருவன், தான் ஒரு குரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும், பஹாங்கிலிருந்து சபாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் அப்பெண்ணின் கிரேடிட் கார்ட் எண்ணும் அடையாள எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது பண மோசடி என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளான். இது தொடர்பாக போலிஸ் அப்பெண்ணை தொடர்புக் கொள்வார் எனவும் கூறியுள்ளான்.
சிறிது நேரம் கழித்து, அப்பெண்ணை போலிஸ் அதிகாரி என அடையாளம் கூறிக்கொண்ட மற்றொரு ஆடவன் தொடர்புக் கொண்டுள்ளான். தன்னுடைய பெயர் இன்ஸ்பெக்டர் கூ எனக் கூறிக்கொண்ட அந்த ஆடவன் அப்பெண் போதை பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து, ஒரு புதிய வங்கி எண்ணை திறக்கும்படியும் அப்பெண்ணின் சேமிப்பு பணத்தை அந்த புதிய வங்கிக் கணக்கில் சேர்க்கும்படியும் பணித்துள்ளான். அப்பெண்ணும் 509,500 ரிங்கிட்டை முதலில் அப்புதிய வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணை மீண்டும் அழைத்துள்ள அந்த ஆடவன் இன்னும் கொஞ்சம் பணத்தை புதிய வங்கிக் கணக்கில் போட வேண்டும் என பணித்துள்ளான்.

விசாரணைக்குப் பின் தன்னுடைய பணம் மீண்டும் திரும்ப தரப்படும் என அந்த ஆடவன் உறுதியளித்ததைத் தொடர்ந்து அதனை நம்பிய அப்பெண் மொத்தம் 75 முறை பணத்தை பலதரப்பட்ட வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். மேலும் 350,00 ரிங்கிட்டையும் அவர் வழங்கியுள்ளார் என பஹாங் மாநில வர்த்தக குற்றப் பிரிவின் தலைவர் முகமட் வாசீர் தெரிவித்தார்.

நேற்றுவரை தன்னுடைய பணம் துன்னுடைய பணம் திரும்ப கிடைக்காததைத் தொடர்ந்து மேலும் அந்த மோசடி பேர்வழியை தொடர்புக் கொள்ள முடியாததால் இறுதியில் அப்பெண் போலிசிடம் புகார் வழங்கினார் என வாசீர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!