Latestஉலகம்

இத்தாலியில் ஒரே நாளில்  627 பேர் மரணம்

ரோம்,  மார்ச் 21 – கோவிட் -19  வைரஸ் தொற்றினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் ஒரே நாளில் நேற்று மட்டும் 627 பேர் மரணமடைந்தனர். அங்கு இந்த உயிர்க்கொல்லியினால் இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,032 ஆக அதிகரித்தது. 47,021 பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் இப்படி ஒரு மோசமான துயரத்தை இத்தாலி சந்தித்தது இல்லை என  கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட Bergamo நகரத்தின் மேயர் Giorgio Gori வேதனையோடு தெரிவித்தார்.

உண்மையில் Bergamo நகரில் மரணமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.

வயதானவர்கள் பலர் தங்களது வீட்டிலும் முதியோர் இல்லங்களிலும் மரணமடைகின்றனர் .இவர்களை பரிசோதிக்காமல் அவசரம் அவசரமாக அடக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது என Giorgio Gori குறிப்பிட்டார்.

மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட மக்களின் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை  இத்தாலி அரசாங்கம்  மேலும் வலுப்படுத்தியது.

பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மக்களும் சரியான நடவடிக்கையை மேற் கொள்வதன் மூலமாகவே கோவிட்-19 வைரசுக்கு எதிராக போராட முடியும்‌ என இத்தாலி சுகாதார அமைச்சர் Roberto Speranza  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!