Latestஉலகம்

இத்தாலியில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்துள்ளது

இத்தாலியில் கோவிட் 19-வைரஸ் தொற்று மிகவும் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என இத்தாலி பிரதமர் GIUSEPPE CONTE கேட்டுக்கொண்டுள்ளார். இந்த உயிர்க்கொல்லி தொற்று இத்தாலி முழுவதிலும் மிகவும் வேகமாக பரவி வருவதால் 6கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டு மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு சிசிக்சைக்கு செல்பவர்கள் மற்றும் அவசர வேலையின் காரணமாக மட்டுமே மக்கள் தங்களது வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இத்தாலி முழுவதிலும் பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் உயர்க்கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திற்கு முன்னதாக இவை திறக்கப்படும் சாத்தியம் இப்போதைக்கு இல்லையென்றும் கூறப்பட்டது.
இதுவரை இத்தாலியில் 9,172பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ பாதிப்பினால் அந்நாட்டில் மாண்டவர்களின் எண்ணிக்கை 463ஆக உயர்ந்துள்ளது.

காற்பந்து போட்டிக்ள் உட்பட அனைத்து வெளி நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், தொல் பொருட்காட்சி மையம் ஆகியவை மூடப்பட்டன. உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் மாலை 6 மணியோடு மூடும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டு மையங்களும் மூடப்பட்டன. உணவகங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

சிறைச்சாலைகளில் வருகையாளர்களின் நேரம் குறைக்கப்பட்டதை தொடர்நது இத்தாலி முழுவதையும் சேர்ந்த கைதிகள் சிறைச்சாலைகளில் கலவரத்தில் ஈடுபட்டதால் அறுவர் கொல்லப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!