Latestஉலகம்

இத்தாலியில் மரண எண்ணிக்கை 17,000 தாண்டியது

ரோம், ஏப் 8- கோவிட் -19 வைரஸ் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17,127பேர் ஆகியது. அந்த நாட்டில் 135,586பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜெர்மனி – நெதர்லாந்தை குறைகூறியது ஸ்பெய்ன்
மெட்ரிட், ஏப் 8- ஐரோப்பாவில் கோவிட் -19 வைரஸினால் மிகவு மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தொழில்மய மேம்பாடு அடைந்து இதர ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை ஸ்பெய்ன் கடுமையாக சாடியது.

இப்போதைய நிலையில் ஸபெய்னும் இத்தாலியும் பெரிய அளவில் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த தொற்றினால் பெரிய அளவில் தொழில்துறைகளும் முடங்கிவிட்டன. ஆனால் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஜெர்மன் மற்றும் ஸ்பெய்ன் தொடர்நது மொளனம் காத்து வருவதை ஸ்பெய்ன் பிரதமர் PEDRO SANCHES சாடினார்.

ஸ்பெய்னில் கோவிட் -19 தொற்றின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14,045 ஆக உயர்ந்தது. தற்போது அமெரிக்காவுக்கு அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெய்ன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 141,942பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரான்ஸில் முதியோர் இல்லத்தில் 820பேர் மரணம்
பாரிஸ், ஏப் 8- பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 607பேர் மரணம் அடைந்தனர். இதுதவிர அங்குள்ள முதியோர் இல்லங்களில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 820 முதியோர்களும் உயிரிழந்தனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,328 ஆகியது. அந்நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை இன்னமும் பலர் மீறி பூங்காக்களில் உடற்பயிற்சிக்காக கூடுவதை பிரான்ஸ் அதிகாரிகள் சாடினர். நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் கடுமையாக்குவது குறித்தும் பிரான்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மேலும ஜெர்மனியில் 2,016பேரும், சீனாவில் 3,333பேரும் ஈரானில் 3,872பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!