Latestஇந்தியாசினிமா

இந்தியன் 2 படபிடிப்பு விபத்து; கமல் ஹாசனிடம் 3 மணிநேரம் போலீஸ்  விசாரணை

இந்தியா,மார்ச் 5 – இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியானது  தொடர்பாக நேற்று கமல் ஹாசனிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணைக்குப் பிறகு கமல் ஹாசனின் மக்கள் நீதி மையத்தின்  மாநில செயலாளர்,அந்த விபத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனாலும், அவரை மூன்று மணி நேரம் விசாரித்தது வேறு கட்சியின் தலைவர்களின் சதியே என்று அவர் தெரிவித்தார்.

அவரின் கூற்றுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில், பிக் பாஸ் 3ல் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, 3 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும் என தனது டுவீட்டர் அகபக்கத்தில் பதிவிட்டிருந்தார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!