Latestசினிமா

இந்தியன்-2 விபத்து தொடர்பாக கமல்ஹாசனிடம் போலீசார் விசாரணை

இந்தியா, மார்ச் 3 – ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் பலியானது தொடர்பில் படபிடிப்பு குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உட்பட அறுவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!