Latestஇந்தியாஉலகம்மலேசியா

இந்தியவில் சிக்கிக் கொண்டவர்களை தாயகம் கொண்டுவர ஏற்பாடு செய்வீர் – பக்காத்தான் ஹரப்பான்

கோலாலம்பூர், மார்ச் 25 – இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ள 1,000த்திற்கும் மேற்பட்ட மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் செயலாளர் மன்றம் கோரிக்கை விடுத்தது.

அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்ற நிலையில் வெளியுறவு அமைச்சு இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் சென்னை, திருச்சி, கேராளாவில் கொச்சின் ஆகிய இடங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்கு திரும்புவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் DAPயின் தலைமை செயலாளர் லோக் சியூ புக், பி.கே.ஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுட்டின், அமனா கட்சியின் செயலாளர் ஹட்டா ரம்லி ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்தனர்.

நேற்று தொடங்கி மூன்று வாரங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தியாவில் இன்னும் எத்தனை மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை கண்டறிவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் செயலாளர் மன்றம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவில் சிக்கிக்கொண்டிருக்கும் எந்தெவொரு மலேசியர்களும் விடுபட்டு விடக்கூடாது. வெளிநாட்டில் சிக்கிக் கொண்டுள்ள அனைத்து மலேசியர்களும் நாட்டிற்கு திரும்ப கொண்டுவரப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் வலியுறுத்தியது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!