Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில்  கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளோனோரின் எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்தது

புதுடில்லி, ஏப் 6 – இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதுவரை  4,067 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதோடு கோவிட்-19 வைரஸ் தொற்றினால் இந்தியாவில்  109 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் மட்டும்  571 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனிடையே கோவிட் -19 வைரஸ் இந்த வாரத்தில்  உச்சத்தை எட்டும் என இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. கடந்த இரண்டு நாட்களில் அந்த உயிர்க்கொல்லி தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!