Latestஇந்தியா

இந்தியாவில் கோவிட் -19 வைரசினால் மருத்துவர் பலி

புதுடில்லி, ஏப் 9 – 1 இந்தியாவில் முதல் முறையாக கோவிட் – 19 வைரஸிற்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் கோவிட் -19 வைரஸ் பாதிப்புக்குள்ளான அந்த மருத்துவர் இறந்ததை இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அதே வேளையில் இந்த மருத்துவர் கோவிட் -19 வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிசிக்சை அளித்தாரா என்பது தெரியிவில்லை. இந்தூரில் 200க்கும் மேற்பட்டோர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு அவர்களில் 22 பேர் மரணம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!