Latestஇந்தியா

இந்தியாவில் சுய ஊரடங்கு இன்று தொடங்கியது

புதுடெல்லி மார்ச் 22 –

கோவிட் -19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு  இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவில் இதுவரை 315 பேர் கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு நால்வர் மரணம் அடைந்துள்ளனர்.

கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இந்திய மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் சுய ஊரடங்கு நடைமுறையை இன்று பின்பற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

இன்று காலை ஏழு மணிக்கு இந்த சுயக்கட்டுப்பாடு ஊரடங்கு இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் தொடங்கியது. ரயில் போக்குவரத்தும் இதர பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இரவு 9 மணி வரை அமலில் இருக்கும் இந்த சுய கட்டுப்பாட்டு ஊரடங்கை  மக்கள் முழுமையாக பின்பற்றுவார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் சினிமா அரங்குகள், உணவகங்கள் ,வணிக நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய கடைகள்  மூடப்பட்டன.

பஸ் மற்றும் விமான போக்குவரத்தும செயல்படவில்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!