Latestஇந்தியா

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நடமாட்ட கட்டுப்பாடு – நரேந்திர மோடி உத்தரவு

புதுடில்லி, மார்ச் 20 – கோவிட் -19 வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் கோவிட் -19 வைரஸிற்கு நான்காவது நபர் பலியாகியுள்ளார். இதுதவிர இதர 174 பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த வேளையில் மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஒரு நாள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 130 கோடி இந்திய மக்களும் கோவிட் -19 விவகாரத்தை தேசிய பிரச்சனையாக கருதி அந்த தொற்று பரவுவதை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

அன்றைய தினம் பொதுமக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட் -19 வைரஸ் தொடர்பில் இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இந்தியப் பிரதமர் பல விவேகமான திட்டங்களை அறிவித்தார்,
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேற்க்கூடாது, முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்காக மக்களே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்காக இதனை கருத வேண்டும் எனறும் அவர் வலியுறுத்தினார். உலகப் போர் போன்ற மோசமான தாக்கத்தை கோவிட் -19வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிர்க்கொல்லி இந்தியாவை பாதிக்காது என மக்கள் நினைத்துவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது . உலகில் பல நாடுகள் இப்போது கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதுபோன்று இரண்டாவது உலகப் போரின்போதுகூட இப்படியொரு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மோடி சுட்டிக்காட்டினார். அதோடு கோவிட் -19 iவைரஸ் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிறப்பு பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

அதே சமயத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மூலம் கோவிட் -19 அதிகமாக பரவி வருவதால் மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அனைதுத்துலக பயணிகள் விமானங்கள் தரையிறங்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!