Latestஇந்தியா

இந்தியாவில்’ டிக்டாக்’ உட்பட 59 சீனாவின் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஜூன் 30 – இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ள Tik Tok உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீனாவின் செயலிகளுக்குத் இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அவை நாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அத்தகைய செயலிகள், நாட்டின் அரசுரிமை, நீதியமைப்பு, ஒருமைப்பாடு, தற்காப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்ட செலயிகளின் பட்டியலில் WeChat செயலியும் அடங்கும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக எல்லையில் போர் நீடித்ததைத் தொடர்ந்து சீனாவின் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயனாளர்களின் தகவல்களை ரகசியமாகத் திருடி, பகிர்ந்து கொள்வதாகப் பல்வேறு புகார்கள் கிடைக்கப்பெற்றதால், சீனாவின் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!