Latestஇந்தியா

இந்தியாவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,734ஆக உயர்வு: 166 பேர் மரணம்

புதுடில்லி, ஏப் 9- உலகை அச்சுறுத்திவரும் கோவிட் -19வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 5,734பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 130கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி தொற்று பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவு உட்பட பல்வேறு செயல் திட்டங்களை எடுத்து வருகிறது.

எந்தவொரு நெருக்கடியையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் தயாராய் இருப்பதாக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் கூறியுள்ளனர்.  அதே வேளையில் இந்த தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் 166பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 473பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் புதிதாக 162பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,297பேராக அதிகரித்தது. இதனிடையே தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. இதன்வழி அம்மாநிலத்தில் இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 738ஆக உயர்ந்தது.

இந்த தொற்றின் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 42பேர் புதுடில்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் கோவிட் -19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 8பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!