Latestஇந்தியா

இந்தியா முழுவதும் ரயில் சேவை 31ம் தேதிவரை நிறுத்தம் தமிழகத்தில் நாளை காலை வரை சுய ஊரடங்கு

சென்னை மர்ச் 22

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஒரு நாள் சுய ஊரடங்கு இன்று இரவு ‌‌9.00 மணிக்கு முடிவுக்கு வந்தாலும் தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா இன்று சுய ஊரடங்கை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தியது.

இதனிடையே இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர்  உயிரிழந்தார்.

கத்தாரிலிருந்து இந்தியா
திரும்பிய  38 வயதுடைய ஆடவர்  கோவிட்  – 19 வைரஸ் காரணமாக பாட்னாவில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் மரணமடைந்த ஆறாவது நபர் இவராவார்.

இந்தியாவில் இதுவரை  341 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது.

மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவில் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே இன்று அறிவித்தது. உலகம் முழுவதிலும் மிக வேகமாக பரவி வரும் கோவிட் -19 வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்பவர்கள் மூலமாக அதிகரித்து வருவதாக அச்சம் ஏற்பட்டது.

இதன் காரணமாக வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!