Latestமலேசியா

இந்துக்களுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டு எதிர்வாதம் புரியும்படி புகைப்படக்காருக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஜூன் 30 – இந்துக்களுக்கு அவதூறு ஏற்படுத்தியிருப்பதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அரசு தரப்பு நிருபித்திருப்பதால் எதிர்வாதம் புரிவதற்கு தயாராகும்படி கோலாலம்பூரைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஷம்ரி அப்துல் ரசாக்கிற்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும் என நீதிபதி எட்வின் பரஞ்சோதி தெரிவித்தார், 53 வயதுடைய ஜம்ரி அப்துல் ரசாக் இந்துக்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக கடந்த கடந்தாண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டார். அரசுத்தரப்பு ஒன்பது சாட்சிகளை விசாரணைக்காக அழைத்திருந்தது
ஜம்ரி பின் அப்துல் ரசாக் என்ற பெயரில் செயல்பட்ட முகநூலில் இந்து சமயத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் அம்சங்களை பதிவேற்றம் செய்ததாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 விதியின் கீழ் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அவருக்கு கூடியபட்சம் 50,000 வெள்ளிவரை அபராதம் , ஒரு ஆண்டு சிறை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!