Latestஉலகம்

இந்தோனேசியாவில் நிலைமை மோசமடைகிறது

ஜகர்த்தா, ஏப் 7 – கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இந்தோனேசியாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் இந்த உயிர்க்கொல்லிக்கு 24 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சிரகமான தகவலை இந்தோனேசிய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மருத்துவ பணியாளர்களின் மரண எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குறைகூறலும் இப்போது எழுந்துள்ளது. இதுவரை இந்தோனேசியாவில் 2,491 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்ப்பதாக கூறப்பட்டது. அதோடு 209 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!