Latestஉலகம்

இந்தோனேசியாவில் மவுன்ட் மெராப்பி எரிமலை குமுறல்

ஜக்கார்த்தா, மார்ச் 3 -இந்தோனேசியாவின் மவுன்ட் மெராப்பி எரிமலை இன்று காலையில் எரிமலை குமுறியது. அதிலிருந்து வந்த புகைமுட்டம் 6 கிலோமீட்டர் உயரம் சென்று காற்றோடு கலந்தது. இதனால் சோலோவில் உள்ள அடி சொயேமார்மொ விமான நிலயம் (Adi Soemarmo airport) தற்காலிகமாக மூடப்பட்டது.

10 கி.மீ சுற்றளவில் சாம்பல் காணப்பட்டதாக புவியியல் பேரிடர் தொழிநுட்ப ஆராய்ச்சி மையம் (BPPTKG) தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு பதிவு செய்தது. அந்த எரிமலை பகுதியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் வசிப்பவர்கள்  நடைபயணம் மற்றும் பிற நடவடிக்கைகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு மவுன்ட் மெராப்பில்  நிகழ்ந்த எரிமலை குமுறலில் 350 பேர் பலியாகினர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!