Latestமலேசியா

இன்று  கோவிட் தொற்றுக்கு 78 பேர்  பாதிப்பு – ஒருவர் மரணம்

புத்ராஜெயா, மே 22 – இன்று புதிதாக  78 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகினர். இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7,137ஆக அதிகரித்தது. கடந்த 10 நாட்களில் முதல் முறையாக ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகினர்.  தொற்றுக்குள்ளான 78 பேரில்   25 பேர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள்.  எஞ்சியோர் உள்ளூரில் தொற்றுக்குள்ளானவர்கள் என சுகாதாரத்துறையின்  தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று அறிவித்தார்.

புக்கிட் ஜாலில் குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து மேலும்  25 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.  இதற்கு முன் அந்த முகாமைச் சேர்ந்த  35 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டது..   63 பேர் முழுமையாக குணம் அடைந்து  மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.  கோவிட்-19 தொற்று பரவியது முதல் இதுவரை 5,859பேர் இந்த தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

தற்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் 1,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   9 பேர்  அவசர சிகிச்சை  பிரிவில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் எழுவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிசை பெற்று வருகின்றனர். கோவிட் தொற்றுக்கு இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதன்வழி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்தது. நீரிழிவு,  உயர் இரத்த அழுத்தம் மற்றும்  சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியிருந்த  65வயது ஆடவர் மரணம் அடைந்தார்.  ஏப்ரல்   3ஆம்தேதி   சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்  நேற்று  பிற்பகல் மணி 2.58அளவில் மரணம் அடைந்தார் என டாக்டர் நோர் ஹிஷாம்   தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!