Latestஉலகம்

இன்று கோவிட்-19-னுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மனிதருக்குச் செலுத்தி பரிசோதிக்கிறது பிரிட்டன்

ஏப் 22 – பல உலக நாடுகள் கோவிட்-19-னுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர மும்முரம் காட்டி வரும் வேளையில், பிரிட்டன் இன்று முதன் முறையாக தாம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை மனிதருக்குச் செலுத்தி பரிசோதித்துள்ளது.

Oxford பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருத்தின் சோதனை வெற்றியடைந்தால் உலகமே கோவிட்-19 தாக்கத்திலிருந்து விரைவில் விடுபடும் சாத்தியம் ஏற்படும்.
இந்த தடுப்பு மருந்து வெற்றிப்பெறுவதற்கான சாத்தியம் 80% உள்ளதாக அப்பல்கலைகழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து 510 ஆரோக்கியமான தன்னார்வளர்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் பாதுகாப்பு தன்மையையும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் ஆற்றலும் பரிசோதிக்கப்படும்.

தமது அரசாங்கம் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு நிதியுதவி உட்பட தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருகிறது என பிரிட்டன் சுகாதார அமைச்சர் Matt Hancock தெரிவித்துள்ளார். Oxford பல்கலைகழகம் பரிசோதனை மேற்கொள்ளும் அதே சமயத்தில் லண்டன் Imperial College-ம் இன்னோரு வகை தடுப்பு மருந்தை மனிதருக்கு செலுத்தி பரிசோதிக்கும் என்றார் அவர்.
பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை கண்டு பிடித்து, சோதனைக்கு உட்படுத்தி பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும். இப்போது இந்த இரு பல்கலைகழகங்களின் பரிசோதனைகள் வெற்றிப் பெற்றால் செப்டம்பர் மாதத்தில் அந்த தடுப்பு மருந்து பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனை வெற்றி பெற்று மிக விரைவில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த உயிர்கொல்லி தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு ஏறக்குறைய ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழ்நாடு MGR மருத்துவ பல்கலைகழகம் Reverse Vaccinology முறையில் கொரோனா வைரஸ் தடுக்கும் புரதத்தைக் கண்டு பிடித்துள்ளதாக அப்பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

சுதா சேஷயன், புஷ்கலா, தமன்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் அதனை கண்டுபிடித்திருப்பதாக முதல் கட்ட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு 1 வருட காலம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சித்த மருத்துவ முறை மூலமும் இத்தொற்றுக்கான மருந்து கண்டுபிடிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுக்காய், கர்பூர வள்ளி உள்ளிட்ட 11 வகை மூலிகைகளை உட்படுத்தி அந்த சித்த மருத்துவ தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!