Latestஉலகம்மலேசியா

இன்ஸ்பெக்டர் சின்னையாவால் உதவப்பட்ட ரஷ்ய குழந்தையும் தம்பதியரும் நாடு திரும்பினர்

கோலாலம்பூர், மே 23 – MCO காலத்தின்போது மலேசியாவில் சிக்கிக்கொண்ட ரஷ்ய தம்பதியரும் மலேசியாவில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் பிறந்து அவர்களது குழந்தையும்  ஆறு வாரங்களுக் பிறகு ரஷ்யா புறப்பட்டனர்.   குழந்தை     ஈவான், அதன் பெற்றோர்  யெவ் ஜெனி மற்றும் நட்டலியா பெர்வின் தம்பதியர் உட்பட  மலேசியாவில் சிக்கிக்கொண்ட  200 ரஷ்யர்கள்  வாடகை விமானத்தில் நேற்றிரவு  ரஷ்யா புறப்பட்டனர்.

மாஸ்கோ சென்றடைந்தவுடன்    ஆர்க்கங்கெல்சிலுள்ள எங்களது  ஊருக்கு செல்வதற்கு  மேலும்  இரண்டு மணி நேரம் விமான பயணம் செய்ய வேண்டியுள்ளது.  அங்கு சென்றவுடன்  14 நாட்கள் தனித்திருக்க  வேண்டியிருப்பதாக  யெவ் ஜெனி கூறினார்.  தென்கிழக்காசியாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில்  கோவிட் தொற்றினால் நாடு திரும்ப முடியாமல்  கோலாலம்பூரில்  சிக்கிக்கொண்டபோது  மாநகரின் மையப் பகுதியிலுள்ள  கைவிடப்பட்ட வீட்டில் எங்களுக்கு  பிறந்த குழந்தையை மறந்துவிட முடியாது என  யெவ் ஜெனி தெரிவித்தார்.

மலேசியர்கள் கருணையோடு நடந்துகொண்டனர். காலியான வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம் அந்தவீட்டின் உரிமையாளர் நண்பராகியதை தொடர்ந்து அந்த காலி வீட்டிலேயே தங்கியிருந்தோம்.  புதிதாக பிறந்த எங்களது குழந்தைக்கு இன்ஸ்பெக்டர் சின்னையாவும் இன்னும் சில அதிகாரிகளும் “diapers” வாங்கிக்கொடுத்து உதவி செய்தனர்.  காய்கறிகளை ஏற்றுவதற்கான  பகுதி நேர வேலையையும் போலீசார் எனக்கு வாங்கிக் கொடுத்தனர். அந்த வேலை இங்கு தங்கியிருந்போது செலவுக்கு உதவியாக இருந்தது. மலேசியாவில் சிக்கிக்கொண்ட இதர ரஷ்யர்களும் இந்த காலி வீட்டில் தங்கியிருந்தனர்.  ஒருவரைத் தவிர நாங்கள் அனைவரும் ரஷ்யா புறப்படுகிறோம் என  யெவ் ஜென் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!