Latestமலேசியா

இரத்த தானம் செய்ய முன்வருவீர் – தேசிய இரத்த வங்கி கோரிக்கை

கோலாலம்பூர், ஏப் 10 – பொதுமக்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என தேசிய இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள்  நடமாட்ட கட்டுபாட்டினால் இரத்த தானம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்துள்ளனர். ஆகவே அவர்கள் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரத்தத்தின் வழி இந்த வைரஸ் தொற்று நோய் பரவுவதாக ஆய்வுகள் கூறவில்லை என்பதால் மக்கள் தாராளமாக இக்காலக்கட்டத்தில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இரத்த தானம் செய்யலாம் என இரத்த வங்கி கூறியுள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் ஜாலான் துன் ரசாக்கிலுள்ள தேசிய இரத்த வங்கி, மிட்வேலியில் உள்ள இரத்த தானம் நிலையம் அல்லது புத்ராஜெயாவில் உள்ள புஸ்பானிதா இரத்த தானம் மையங்களுக்குச் சென்று தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!