Latestமலேசியா

இரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்

ஜோகூர், மார்ச் 27 – கம்போங் டத்தோ இப்ராகிம் மஜிட், பண்டார் பாரு டத்தோ இப்ராகிம் மஜிட் ஆகிய இரு கிராமங்களில் 61 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசாங்கம் அங்கு அவசர நிலையை வலுப்படுத்தியுள்ளது என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அந்த இரு கிராமங்களில் உள்ள 650 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3570 பேர்களும் நேற்று நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 9 தேதி வரை வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தபட்ட நிலையில் நுழைவுப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு அடுத்த 14 நாட்களுக்கு சமூக நலத்துறை மூலம் போதுமான உணவு வழங்கப்படும் என்று இஸ்மாயில் தெரிவித்தார். அதே சமயம், ஒவ்வொரு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போலீஸ் படையினர், ஆயுதப் படையினர், தற்காப்பு படையினர் மற்றும் ரெலா ஆகியோர் அவ்விரு கிராமங்களையும் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பணிப்புரிவார்கள் என சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அங்கு இவ்வளவு பபேருக்கு இத்தொற்று கண்டது எப்படி, ஶ்ரீ பெட்டாலிங் சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் யாரும் அங்கு இருக்கிறார்களா அல்லது பங்கேற்பாளர்கள் யாரும் அங்குள்ளவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளாரா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்போங் டத்தோ இப்ராகிம் மஜிட், பண்டார் பாரு டத்தோ இப்ராகிம் மஜிட் சேர்ந்த மக்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர் என முன்னாள் கல்வி அமைச்சரும் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லி மாலிக் தெரிவித்தார். மக்கள் அனைவரும் இந்த கட்டுப்பாட்டு உத்தரவிற்கு இணங்கி பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படியும், pray for Simpang Renggam என கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!