Latestமலேசியா

இரு நாடுகளுக்குமிடையே எல்லையை திறப்பீர் – சிங்கப்பூர் மக்கள் கோரிக்கை

சிங்கப்பூர், ஜூலை 1 – சிங்கப்பூர் மலேசியா இருநாடுகளுக்கும் இடையே நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என சிங்கப்பூரை சேர்ந்த பலர் விரும்புகின்றனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 1,123 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணங்கள் தொடங்கப்படும் போது அது தொடர்பான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர் .
எல்லையை கடப்பதற்கு முன் உடலின் வெப்பத்தை கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். அதோடு எல்லையை கடப்பதற்கு முன் நோய் அறிகுறிகள் பிரகடனத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென 76 விழுக்காட்டினர் வலியுறுத்தினர்.
எல்லையைத் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எச்சில் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டுமென சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் மற்றொருவர் நாட்டிற்கு திரும்பிய பின்னர் 14 நாட்கள் தனித்திருக்கும் நடவடிக்கையும் அமுல்படுத்தப்பட வேண்டுமென சிலர் தெரிவித்தனர்.
இதனிடையே இரு நாடுகளையும் சேர்ந்த மக்களுக்கு எல்லைகளை திறப்பதற்காக சிங்கப்பூர் உடன் மலேசியா பேச்சு நடத்தி வருவதாக தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏற்கனவே கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!