Latestமலேசியா

இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்

புத்ராஜெயா,  மே  26 – சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவர்.
எனினும் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் முழுமையான பாதுகாப்பு அங்கியை அவர்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அவர்கள் 14 நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அவசரமான சூழ்நிலையில் சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டியிருக்குமானால் இங்கு கட்டாயமாக 14 நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டியதில்லை என தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முழுமையான பாதுகாப்பு மேலங்கியை அவர்கள் அறிந்திருக்க  வேண்டுமென்பது நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளில் ஒன்று என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிச் சடங்கின்போது மூன்று மணி நேரம் அவர்கள் இங்கு இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர். .அவர்களுடன் முதன்மைப் பணியாளர்களும் வருவார்கள் என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தபோது இஸ்மாயில் சபரி இதனை தெரிவித்தார்.

இவர்கள் திரும்பிச் சென்ற பின் தனித்து வைக்கப்பட வேண்டுமா என்பதை சிங்கப்பூர் குடியரசு தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் சொன்னார்.

இதனிடையே தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு  சிங்கப்பூரில் பஸ் டிரைவராக பணியாற்றும் மலேசிய பெண்மணிக்கு உதவுவதற்கு தயாராய் இருப்பதாக   மலேசிய தூதரக அதிகாரி தெரிவித்தார்.

அவசரமான சூழ்நிலையில் அந்தப் பெண்மணி நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுமென  சிங்கப்பூரில் உள்ள மலேசியா தூதரகத்தின் துணைக் தூதர் முகமட் ரட்ஷி ஜமாலுடின்  கூறியிருந்தார்.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பயண விதிமுறைகள் இருந்தபோதிலும் அவசரமான சூழ்நிலையில் சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கான ஏற்பாட்டு உதவிகளை தூதரகம் வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!