Latestஇந்தியா

இலங்கைக்கு 10 டன் மருந்துகளை இந்தியா அனுப்பியது

புதுடில்லி, ஏப் 8- கோவிட் -19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் பொருட்டு 10 டன் மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கையில் இதுவரை கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் மருந்து பொருட்களை உதவியாக வழங்கும்படி இந்தியாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து இலங்கைக்கான 10 டன் மருந்து பொருட்களுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாக இலங்கை திகழ்வதால் ஆபத்தான நேரத்தில் அந்நாட்டிற்கு கைகொடுக்கும் வகையில் இந்த மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது. இலங்கையில் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்குள் நுழைவதற்கு நேற்று முதல் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!