Latestமலேசியா

இவ்வாண்டில் மக்கள் தொகை 3 கோடியே 20 லட்சமாக உயரக்கூடும்

கோலாலம்பூர், ஜூலை 15 – மலேசியாவின் மக்கள் தொகை 2020ஆம் ஆண்டில் 3 கோடியே 27 லட்சம் பேராக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு 3 கோடியே 25 லட்சமாக இருந்த மக்கள் தொகை ஒரு ஆண்டில் 0.4 விழுக்காடாக வளர்ச்சி கண்டதால் மலேசியாவின் மக்கள் தொகை 3 கோடியே 27 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 31 லட்சமாக இருந்த மலேசிய பிரஜை அல்லாத மக்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 30 லட்சமாக குறைந்தது ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி குறைந்ததற்கு காரணமாக இருக்கும் என மலேசிய மக்கள் தலைமை புள்ளி விவரத்துறை அதிகாரி முகமட் ஊஷிர் மஹிடின் ( Mohd Uzir Mahidin ) கூறினார்.

உலகளாவிய நிலையில் கோவிட்-19 தொற்று பரவியதைத் தொடர்ந்து நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது வெளிநாட்டவர்களில் பலர் தங்களது நாடுகளுக்கு திரும்பியது மற்றும் நமது தேசிய எல்லைகளை மூடியதும் இதற்கு காரணம் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று முகமட் ஊஷிர் தெரிவித்தார். இவ்வாண்டு ஆண்கள் மக்கள் தொகை ஒரு கோடியே 68 லட்சமாகவும் பெண்களின் மக்கள் தொகை ஒரு கோடியே 59 லட்சமாகவும் உள்ளது.

மேலும் வேலை செய்யக்கூடிய 15 முதல் 64 வயதுடையவர்களின் ஒட்டு மொத்த விழுக்காடு 2019ஆம் ஆணடு 69.8 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு இந்த விழுக்காடு 69.7 விழுக்காடாக குறைந்துள்ளது. வேலை செய்பவர்களில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும். அதே வேளையில் 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடையோரின் மக்கள் தொகை 6.7 விழுக்காட்டிலிருந்து 7.0 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதனிடையே 2030ஆம் ஆண்டில் வயதானவர்களின் மக்கள் தொகை 15.3 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, 2020ல் மூன்று மாநிலங்கள் கூடுதலாக மக்கள் தொகையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூரில் 20 விழுக்காடும். சபாவில் 12 விழுக்காடும் மற்றும் ஜோகூரில் 11,6 விழுக்காடும் மக்கள் தொகை உயரும் என ஊஷிர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!