Latestமலேசியா

ஈப்போவின் பிரபல தங்கும் விடுதி மூடப்படுகிறது

ஈப்போ, ஏப் 1- ஈப்போவில்  செயல்பட்டுவந்த   பிரபல தங்கும் விடுதியான    (THE TOWER REGENCY HOTEL  AND APARTMENT SDN BHD )  நிதி நெருக்கடியின் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து மூடப்படுவதாக அறிவித்துள்ளது.  . இதனால்  அந்த தங்கும் விடுதியில் வேலை செய்துவரும்  சுமார்  150  உள்நாட்டு பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த   3 ஆண்டு காலமாகவே  இந்த தங்கும் விடுதி  நிதி நெருக்கடியை   எதிர்நோக்கி வந்ததால்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.    இது குறித்து   அந்த தங்கும் விடுதி  தனது  பணியாளர்களுக்கு வழங்கிய  அறிவிப்பு சமுக வலைத்தளங்களில் வெளியானது. இந்த தங்கும் விடுதி மூடப்படுவதை  வரவேற்புப் பிரிவில் பணியாற்றிவரும்  பணியாளர்களில் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!