Latestமலேசியா

உடும்பை காப்பாற்றிய ஹீரோ

கோலாலம்பூர், மே 26- உடும்பு ஒன்றை காப்பாற்றிய ஆடவர் சமூக வலைத்தளங்களில் ஹீரோவானார். ஹரி ராயா கொண்டாட்டத்தின்போது மலாய் பாரம்பரிய உடையில் காணப்பட்ட அந்த ஆடவர் உடும்பின் தலை   சாடின் டின்னில் சிக்கிக்கொண்டு  இருந்ததைக் கண்டு அச்சம் எதுவுமின்றி அந்த  உடும்பிற்கு மனிதாபிமானத்தோடு உதவி செய்துள்ளார்.

Agak2 berapa hari agaknya dia mcm tu…Lepas ni biawak ni jumpa tin sardin mesti dia lari lintang pukang.Mmg nasib dia jumpa bro ni yg sanggup tolong…terbaik bro ni hehe.Ni biawak dik bukan buaya 😆.@careta_malaysia #syawal2020 #kitajagakita #madanibikes

Posted by Madani Bikes on Monday, May 25, 2020

இதுபற்றிய காணொளி மலேசிய விலங்குகள் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உடும்பு வனவிலங்காக  இருந்தாலும் அதற்கு பெரு மனதோடு உதவ முன்வந்த அந்த ஆடவரின் செயலை மலேசிய விலங்குகள் சங்கம் பாராட்டியுள்ளது

இந்த ஆடவரின் இந்த துணிகர முயற்சிக்கு வலைத்தள வாசிகளும் தங்களது பாராட்டை தெரிவித்துக் கொண்டுள்ளனர். தீனியை தேடிச் சென்றபோது அந்த  உடும்பின் தலை காலியாக கிடந்த சாடின் டின்னில் சிக்கிக்கொண்டு  தவிப்பதைக் கண்டு  அந்த ஆடவர் உதவியுள்ளார்.

டின்னில் சிக்கிக்கொண்ட உடும்பின் தலையை மீட்ட இந்த சகோதரரின் மனிதாபிமான செயல் என்றும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று என வலைதள வாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதோடு கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது மற்ற உயிரினங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பாடத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!