Latestஉலகம்

உலகளாவிய நிலையில் கோவிட் -19 வைரஸ் பாதிப்பு மரண எண்ணிக்கை 90,000 நெருங்குகிறது 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

ஜெனிவா, ஏப் 9 – கண்களுக்கு தெரியாத எதிரியாக உலகில் பரவிக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 90,000த்தை எட்டுகிறது. இந்த உயிர்க்கொல்லி தொற்று 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவியிருக்கும் இவ்வேளையில் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளானவர்களில் சுமார் 330,697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கோவிட்-19 வைரஸிற்கு தடுப்பூசி அல்லது மருந்துகளை தயாரிக்கும் பணியில் அறிவியல் நிபுணர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுவரும் இவ்வேளையில் மலேசியா உட்பட உலகின் பல நாடுகள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

கோவிட்-19 வைரஸை துடைத்தொழிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர கோவிட் அரசியல் நடத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் DR TEDROS ADHANOM கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனதிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 40 கோடி டாலரை உதவி நிதியாக வழங்கியது.

அதோடு சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார நிறுவனம் நடந்துகொள்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு அபத்தமானது என எதியோப்பியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான DR TEDROS ADHANOM தெரிவித்தார். மனுக்குலத்திற்கு பெரிய மிரட்டலாக உருவெடுத்துள்ள கோவிட் -19 வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டுமே தவிர தகராறில் ஈடுபட்டு நேரத்தை விரயமாக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார். நாங்கள் ஒவ்வொரு நாட்டுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றுகிறோம்,. நோய் தொற்றை துடைத்தொழிக்கும் விவகாரத்தில் எந்தவொரு பாகுபாட்டையும் உலக சுகாதார நிறுவனம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்,

ஐ.நா தலைமைச் செயலாளர் ANTONIO GUTERRESசும் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டை தற்காத்து பேசியுள்ளனார். உலகளாவிய நிலையில் கோவிட் -19 வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து பாடுபட வேண்டுமே தவிர தகராற்றுக்கு இது நேரம் அல்ல என ANTONIO GUTERRES தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!