Latestஉலகம்

உலகளாவிய நிலையில் கோவிட் -19 தொற்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம்

லண்டன் , மே 15 – சீனாவின் வூஹன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிற்பகுயில் பரவிய கோவிட் -19 தொற்று பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொற்றை முற்றாக துடைத்தொழிப்பதற்கான மருந்துகள் இன்னும் பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இந்த வேளையில் இதுவரை கோவிட் -19 தொற்றுக்கு உலகம் முழுவதிலும் 303,372பேர் உயிரிழந்திருப்பது மருத்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1918ஆம் ஆண்டு மருத்துவமும் அறிவியல்துறையும் வளர்ச்சியடையாத நிலையில் SPANISH FLU என்ற தொற்று பரவியபோது உலகம் முழுவதிலும் 50கோடி பேர் உயிரிழந்தனர். தற்போது 102 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது பரவியிருக்கும் கண்களுக்கு தெரியாத கோவிட் -19 தொற்று மனுக்குலத்திற்க தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

கோவிட் -19 தொற்றுக்கு இதுவரை 4,525,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இன்று காலைவரை 86,912பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வல்லரசு நாட்டில் 16,000த்திற்கும் மேற்பட்டோர் இன்னமும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 1,457,593 பேர் கோவிட் தொற்றினால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா வட்டாரத்தில் ஸ்பெய்னில் 27,321பேரும் , பிரிட்டனில் 33,614பேரும் இத்தாலியில் 31,368பேரும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 27,425பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!