Latestஉலகம்

உலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது

லண்டன், மே 25 – கோவிட் -19 தொற்றுக்கு உலகளாவிய நிலையில் இன்றுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  346,949 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர இந்த உயிர்க்கொல்லி தொற்றின் பாதிப்புக்கு  5,516,842 பேர் உள்ளாகியுள்ளனர்.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட இன்னும் 53,203 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மரண எண்ணிக்கை உயரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று காலை வரை அங்கு 99,300 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில்  22,746 பேர் மரணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு சுமார் 1600 பேர் இறந்தனர.

ஐரோப்பா வட்டாரத்தில்   ஸ்பெய்னில் 28,752 பேரும், பிரிட்டனில் 36,793 பேரும், இத்தாலியில்   32,793பேரும் பிரான்ஸில்  28,367 பேரும் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவிலும் கோவிட் 19 தொற்று வேகமாக பரவி வருகிறது.  இதுவரை 353,427பேர் தொற்றுக்கு உள்ளாகியிப்பதோடு அங்கு   3,633பேர் மரணம் அடைந்துள்ளனர்.  ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில் மய நாடான ஜெர்மனியில் 8,371 பேர் உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!