Latestஉலகம்

உலகளாவிய நிலையில் 5,306,235 பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 340,047 ஆக உயர்ந்தது

லண்டன், மே 23 –கோவிட் தொற்று உலகில் பல நாடுகளில் மனுக்குலத்திற்கு தொடர்ந்து மிரட்டலை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றை தடுப்பதற்காக பல வளர்ச்சியடைந்த நாடுகளும் அறிவியல் நிபுணர்களும் தடுப்பூசி மருந்துகளை கண்டுப்பிடிக்கும் முயற்சியை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் நாளுக்கு நாள் இந்த உயிர்க்கொல்லி தொடர்ந்து வேகமாக பரவிவருதோடு சில நாடுகளில் மோசமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இன்றுவரை இந்த தொற்று 5,306,235 பேருக்கு பரவியுள்ளது. இதுதவிர உலகம் முழுவதிலும் இந்த தொற்றுக்கு 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் ரஷ்யா, ஸ்பெய்ன், பிரிட்டன் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கோவிட் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்றினால் அதிகமானோர் மரணம் அடைந்த நாடுகளின் பட்டியலில் இப்போது அமெரிக்கா முதல் இடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 97,647 பேர் கோவிட் தொற்று பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். உலகின் மிகப் பெரிய பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசான அமெரிக்காவில் இன்னமும் 17,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதால் அடுத்த சில நாட்களுக்குள் அங்கு மரண எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசில் கோவிட் தொற்று பரவும் புதிய மையாக தற்போது உருவெடுத்து வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 332,382 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இதுவரை 21,116 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 1,492 பேர் இறந்துள்ளனர். அங்கு இன்னமும் 8,000த்திற்கும் மேற்பட்டோர் மருத்துவனைகளில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஐரோப்பா வட்டாரத்தில் ஸ்பெய்னில் 28,62பேரும், பிரிட்டனில் 36,393பேரும், இத்தாலியில் 32,616பேரும் பிரான்ஸில் 28,289பேரும் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவிலும் கோவிட் 19 தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 326,448பேர் தொற்றுக்கு உள்ளாகியிப்பதோடு அங்கு 3,249பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில் மய நாடான ஜெர்மனியில் 8,352 பேர் உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!