Latestஇந்தியாஉலகம்

உலகின் மிகவும் பணக்கார ஆலயமான திருப்பதியில் பணப் பற்றாக்குறை; ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியவில்லை

பெங்களூர், மே 13 – உலகின் மிகவும் பணக்கார ஆலயமாக திகழும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆலயத்தின் அன்றாட செலவுகள் மற்றும் ஆலய ஊழியர்களின் ஊதியம் வழங்கவும் ஆலய நிறுவனம் சிரமப்படுவதாக அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகைக்கு தற்போது 2 மாத காலமாக அந்த ஆலயமும் மூடப்பட்டுள்ளது.

மார்ச் 19 முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கினால் மாதம் 200 கோடி ரூபாய் வருமானம் அதாவது 125 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக தேவஸ்தானத்தின் தலைவர் Y.S. சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மே 1ஆம் திகதி முதல் சுமார் 1300 குத்தகை ஊழியர்களை ஆலய தேவஸ்தானம் வேலையிலிருந்து நிறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான நன்கொடை வருவதால் திருப்பதி ஆலயம் உலகின் பணக்கார ஆலயமாக திகழ்கிறது. 2019 முதல் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 22,100 ரூபாய் அல்லது ஏறக்குறைய 1400 ரிங்கிட் நன்கொடையை அந்த ஆலயம் பெற்று வந்தது.

ஆலயத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு விற்கப்படும் நுழைவு டிக்கெட், விருந்தினர் விடுதிக்கான கட்டணம், திருப்பதி லட்டு விற்பனை மற்றும் பக்தர்களின் முடி காணிக்கை  ஏலம் மூலமாகவும் ஆலயத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது. பக்தர்களின் முடி உலகின் மிகப்பெரிய விக் எனப்படும் செயற்கை முடி செய்யும் நிறுவனங்களிடம் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 142 டன் எடை கொண்ட நரை முடி உட்பட சுமார் 5 முடி வகைகள் விற்கப்பட்டுள்ளன.

ஆனால். அந்த ஆலயத்தின் மிகப்பெரிய வருமானம் ஆலயத்திற்கு கிடைக்கப்பெறும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சொத்து பத்திரங்கள் மற்றும் சில நிறுவனங்கள் வழங்கும் பங்கு விற்பனை ஆகியவையாகும். இவற்றின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 12 பில்லியன் ரூபாயை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், இதர செலவுகள் என ஒவ்வொரு மாதமும் ஆலய தேவெஸ்தானத்தின் செலவுகள் 1200 கோடி ரூபாய் எனவும் சுப்பா ரெட்டி குறிப்பிட்டார்.

மார்ச், ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மே மாத ஊதியம் வழங்குவதற்கு நன்கொடை கிடைத்துள்ளதாகவும் ஜூன் மாத ஊதியம் வழங்குவதற்காக நன்கொடை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது ஏறக்குறைய 1.85 கோடி ரிங்கிட் மதிப்பிலான 8 டன் தங்கமும் 875 கோடி ரிங்கிட் மதிப்பிலான நிரந்தர வைப்பு தொகையும் வங்கியில் இருப்பதாக தெரிவித்த சுப்பா ரெட்டி, ஆனால் அதனை பயன்படுத்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதனை பயன்படுத்துவது பக்தர்களின் உணர்வை அவமதிப்பது போலாகிவிடும். காரணம் அதனை பக்தர்கள் கடவுளுக்கு கொடுத்ததாகும். ஊதியம் மற்றும் ஆலய மேம்பாட்டுக்கு நன்கொடை பணம்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!