Latestஉலகம்

எகுவாடோரில் சவப் பெட்டிகள் பற்றாக்குறை; அட்டைப்பெட்டிகளில் அடக்கம் செய்யும் அவலம்

கியுட்டோ, ஏப் 6-  எகுவாடோரில் கோவிட்-19 வைரஸ் காரணமாக  அடுத்தடுத்து பலர் மரணம் அடைவதால் அந்நாட்டில் சில நகர்களில் சவப் பெட்டிகள்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. GUAYAQUIL என்ற நகரில் சவப் பெட்டிகள்  பற்றாக்குறையினால்  மரணம் அடைந்தவர்களை அட்டைப் பெட்டியின்  மூலம் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லப்படுகிறது.

15 மணி நேரம் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சவப் பெட்டியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மர தளவாட பொருட்கள் கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

பலர்   சவப்பெட்டியை வாங்க முடியாமல் மோசமான ஏழ்மையில் இருக்கின்றனர், கடந்த வாரம்  சவப்பெட்டி கிடைக்காமல் மற்றும் வாங்க முடியாமல்  150 சடலங்கள் தெருக்களில் வீசப்பட்டிருந்தன. இந்த சடலங்களை அப்புறப்படுத்தும்படி  ராணுவத்தை எகுவாடோர் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.  எகுவாடோரில் கோவிட்-19 தொற்றுக்கு 3,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!